ஒரு படம் ஓடிவிட்டால் பிறகு கோடிகளில் சம்பளம் கேட்பது நடிகர்களின் வழக்கம். ஆனால் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தும் கூடுதல் சம்பளம் கேட்காத ஒரு நடிகரும் இருந்துள்ளார்.
அவர் – தென்னாட்டு ஜேம்ஸ்பாண்ட் என்று புகழ்பெற்ற ஜெய்சங்கர்.
இது குறித்து பத்திரிகையாளர் மணி, “எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என முக்கியமான மூன்று நடிகர்கள் தமிழ் சினிமாவை கோலோச்சிக்கொண்டு இந்தனர். அந்த நேரத்தில் துப்பறியும் திரைப்படம் என தனி பாதை தேர்ந்தெடுத்து வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்தார் ஜெய்சங்கர். அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன.
ஆனாலும், தனக்கு சம்பளத்தை உயர்த்தித் தர வேண்டும் என அவர் ஒரு முறைகூட தயாரிப்பாளர்களிடம் கேட்டதில்லை. அவரது படங்களுக்கு மார்க்கெட் ஏறியதால் தயாரிப்பாளர்களே சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தார்கள்” என்றார் மணி.
ஆச்சரியமான ஹீரோதான்!