Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

திருப்பி க்கொடுத்த பானுமதி! அதிர்ந்த எம்.ஜி.ஆர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரையுலகின் உச்சத்தில் எம்.ஜி.ஆர். இருந்தபோது அவரது எதிரில் இயக்குநர்களே அமர மாட்டார்கள்.  அவ்வளவு பவ்யம் காட்டுவார்கள்.

ஆனால் இதற்கு விதிவிலக்காக திகழ்ந்து ஆச்சரியப்பட வைத்தவர் பானுமதி.

தான் இயக்கி நடித்த நாடோடி மன்னன் படத்தில் பானுமதியை கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார் எம்ஜிஆர்.

படப்பிடிப்பில் திடீர் திடீரென காட்சிகள் மாற்றப்பட்டன. ஒரு காட்சிக்கு பல டேக்குகள் வாங்கினார் எம்.ஜி.ஆர்.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத பானுமதி, “மிஸ்டர் ராமச்சந்திரன், இனி நான் நடிக்க முடியாது” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

இதனால் பானுமதி இறந்து போவது போல எம்ஜிஆர் காட்சியை மாற்றினார்.

ஆனாலும், நடித்ததற்கான காசோலையை பானுமதிக்கு அனுப்பினார். ஆனால், பானுமதியோ அந்த காசோலையை திருப்பி அனுப்பிவிட்டார்.

எம்.ஜி.ஆர். என்றாலே பயபக்தியுடன் திரையுலகம் இருந்த காலத்தில், பானுமதி ஒரு அதிசயம்தான்.

 

- Advertisement -

Read more

Local News