சூர்யா நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் சூர்யாவின் திரை பயணத்தில் மைல்கல்லாக அமைந்த படம் காக்க காக்க. இது கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது.
இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன், ரம்யா கிருஷ்ணன், டேனியல் பாலாஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தில் சூர்யா போலீஸ் கதாபாத்திரத்தில் தூள் கிளப்பி இருப்பார். இந்த படத்திற்கு முதலில் “பின்குறிப்பு” என்று தலைப்பு வைத்தர்கள். இதே தலைப்புடன் போஸ்டரும் சோசியல் மீடியாவில் வெளிவந்தது. பின் சில காரணங்களால் அந்த படத்தின் தலைப்பு காக்க காக்க என்று மாற்றப்பட்டது.
இது குறித்து இயக்குனர் கௌதம் மேனன், “இந்த படத்தின் ஒரு காட்சியில் சூர்யாவின் கண்கள் சிவப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக அவர் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்தார். மேலும் அடிக்கடி தலைகீழாக நின்று தனது கண்கள் ரத்த நிறத்தில் இருப்பதற்காக ரிஸ்க் எடுத்தார். ஒருமுறை 6:00 மணிக்கு படப்பிடிப்பிற்காக நாங்கள் அனைவரும் தயாராக இருந்தபோது திடீரென்று சூர்யா மயங்கி விழுந்து விட்டார். நாங்கள் உடனே ஓடிச்சென்று அவரை தூக்கினோம். அந்த நாள் சூட்டிங்கை கூட கேன்சல் செய்து விட்டோம்” என்றார் கௌதம் மேனன்.