கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என நடிப்பில் கொடிகட்டி பறக்கிறார் தனுஷ். இவரது ஆரம்ப கால நடிப்பு பற்றி அவரது தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்து உள்ளார்.
அவர், “18 படங்கள் தயாரித்தேன்.. 20 படங்களுக்கு மேல் இயக்கினேன். ஆனால் ஒரு கட்டத்தில், எல்லாத்தையும் இழந்துவிட்டேன். இந்த நிலையில்தான் மூத்தமகன் செல்வராகவன், கடன் வாங்கி ஒரு படம் பண்ணலாம் என்றான். ஹீரோவாக யாரை போடுவது என சித்தித்தோம். பிறகு இரண்டாம் மகன் தனுசையே நடிக்கவைக்கலாம் என முடிவெடுத்தோம்.
அப்போது தனுசுக்கு சினிமாவை பற்றி எதுவுமே தெரியாது. நடிக்கவும் விரும்பவில்லை. ஆனால் குடும்பத்தின் சூழல் அறிந்து.. படிப்பை தியாகம் செய்து நடித்தான்” என்று உருக்கமாக சொல்லி இருக்கிறார் கஸ்தூரிராஜா.