கமலஹாசன் பெண் வேடமிட்டு கலக்கிய திரைப்படம் அவ்வை சண்முகி. அந்த வேடத்துக்காக பட்ட சிரமத்தை, கமல் சொல்லாத நிலையில் அப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்து இருக்கிறார்.
“அப்போது இரவு இரண்டு மணிக்கு எழுந்திருக்கும் கமல், மூன்று மணிக்கு தனது ஆழ்வார் பேட்டை விட்டிலுருந்து கிளம்புவார். நான்கு மணிக்கு மகாபலிபுரம் அருகே சூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார். அவருக்கு 4 மணி நேரம் மேக் போட வேண்டும். சூட்டிங் 9 மணியிலிருந்து 2 மணி வரை நடக்கும். 2 மணிக்கு மேல் மேக்கப் உறிய ஆரம்த்துவிடும்.
இப்படி 55 நாட்கள் இரவு பகலாக உழைத்தார் கமல்.
தவிர, காலையில் 4 மணிக்கு வேகவேகமாக சாப்பிடுவார். பிறகு 2 மணிக்கு சூட்டிங் முடிந்த பிறகுதான் சாப்பிட முடியும். சாப்பிட்டால் அசைவுகளால் மேக்கப் கலைஞ்சிரும்னு, ஜூஸ் மட்டும் தான் குடிப்பார்.
மேக்கப் கலையாமல் இருக்க ஏ.சி.,யிலே இருக்க வேண்டும். அப்போது கேரவன் கிடையாது. மரப்பெட்டி மாதிரி ஒரு ரூம்ல ஏ.சி வச்சிருப்பாங்க. ஷாட் முடிஞ்சதும் அங்க போய் உட்கார்ந்துருவாரு. ஏ.சி காத்து அடிச்சுக்கிட்டே இருக்கும். பார்க்க பரிதாபமா இருக்கும்” என்று ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.