ரஜினியின் அருணாச்சலம் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதில் ரகுவரன், வி.கே.ராமசாமி போன்ற வில்லன்கள் இருந்தாலும் யாராலும் மறக்க முடியாதது வடிவுக்கரசி கதாபாத்திரம்தான்.
கூன் விழுந்த முதிய பெண்மணியாக நடித்திருந்த வடிவுக்கரசி கதாபாத்திரம், ரஜினி கதாபாத்திரத்தை ஏசுவதும், மிரட்டுவதுமாக இருக்கும்.
இந்த படம் வெளியான நேரம். படப்பிடிப்புக்காக ரயிலில் சென்றார் வடிவுக்கரசி.
அவர், வருவதை தெரிந்து கொண்ட ரஜினி ரசிகர்கள் தண்டவாளத்தில் படுத்து ரயிலை மறித்து இருக்கிறார்கள். பின்னர் வடிவுக்கரசி சென்று அவர்களிடம் ரஜினியை பேசியது தப்பு தான் என மன்னிப்பு கேட்டகச் சொல்லி மிரட்டிஇருக்கிறார்கள். அவர் மன்னிப்பு கேட்ட பிறகே சென்று இருக்கிறார்கள்.
இந்த சம்பவத்தை வடிவுக்கரசியே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.