மாபெரும் ஹிட் கொடுத்த ரஜினியின் அருணாச்சலம் படத்தின் தலைப்பு குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை படத்தை இயக்கிய சுந்தர் சி. கூறியிருக்கிறார்:
“ இந்த படத்திற்கு முதலில் அருணாச்சலம் அதாவது, தலைப்பு வைக்கவில்லை. குபேரன் என்று தான் பெயர் வைத்தேன். இந்த டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னே கசிய தொடங்கியது. இதனால் படக்குழுவும் ரஜினிகாந்த்தும் வேறு ஒரு டைட்டிலை வைக்க முடிவு செய்தார்கள். அதற்குப் பின் ரஜினிகாந்த் என்னை அழைத்து சூப்பர் டைட்டில் ஒன்று யோசித்து வைத்திருக்கிறேன் வீட்டுக்கு வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
அப்போது ரஜினி சாரோட நண்பர் ஒருவர் படம் சூப்பர் டைட்டில் சார் என்று சொன்னார். என்ன என்று சுந்தர் சி கேட்டதற்கு அருணாச்சலம் என்று சொன்னார். உடனே , என்ன அருணாச்சலம், வேதாச்சலம் நல்லாவே இல்லை என்று சொல்லி ரஜினி சாரை சென்று பார்த்தேன்.
அப்போது அவர், படத்தின் டைட்டில் அருணாச்சலம் என்று அவருடைய தோணியில் சொன்னார். உடனே அந்த டைட்டிலுக்கு ஒரு அதிர்வு இருந்ததாக எனக்கு தோன்றியது. அந்த டைட்டில் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. உடனே செய்தியாளர்களை சந்தித்து படத்தின் டைட்டிலை அறிவித்தோம்” என்றார் சுந்தர் சி.