Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

யோசிக்காமல் அஜித் செய்த சம்பவம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வில்லனாக நடித்து வரும் பொன்னம்பலம் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் அவர் அஜித்துடன் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த நடித்தபோது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது.

இதை அவரே சொல்லி இருக்கிறார்:

“அஜித், ஷாலினி நடிப்பில் உருவான அமர்க்களம் திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த பட சூட்டிங்கின் போது  நான் அஜித்தை சந்தித்து ‘என்னுடைய  நண்பரின் மகனுக்கு இதயத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது.  சரி செய்ய

உடனே அவர் சம்பந்தப்பட்ட அந்த பையனின் மெடிக்கல் ரிப்போர்ட், ஹாஸ்பிடல் பில் போன்ற அனைத்தையும் கேட்டு வாங்கினார்.

அதன் பிறகு ஷாட் ரெடியானதால் அவர் நடிப்பதற்கு சென்று விட்டார். எதுவும் சொல்லாமல் அஜித் சென்று விட்டாரே என்று நினைத்த நான், அஜித்  திரும்பி வரும் வரை காத்திருந்தேன்.  சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பி வந்த அஜித் வழக்கம்போல தன்னுடைய வேலையை பார்த்தபடி இருந்தார்.

குழம்பிப்போய்,  நாம் சொல்லியதை அஜித் மறந்து விட்டாரோ என்று நினைத்து மீண்டும் ஆபரேஷன் பற்றி ஞாபகப்படுத்தினேன்.. அதற்கு அஜித், ‘நீங்க என்னிடம் கேட்ட உடனேயே  நான் ஹாஸ்பிடல் பில் அனைத்தையும் கட்டி விட்டேன். நீங்கள் இன்னும் ஏன் இங்கு நிற்கிறீர்கள்’என்றார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பொன்னம்பலம் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன்.  இதுதான் அஜித்தின் குணம். யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டால் உடனே உதவி செய்துவிடுவார். ஆனால் இன்று வரை அவர் தான் செய்யும் உதவிகளை பகிரங்கப்படுத்திக் கொண்டது கிடையாது” என நெகிழ்ச்சியுடன் கூறினார் பொன்னம்பலம்.

 

- Advertisement -

Read more

Local News