Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

எம்ஜிஆர் புரட்சித்தலைவர் ஆனது எப்படி?  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

 

 

 

தமிழ்த்திரை உலகில் மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தவர் எம்ஜிஆர்.

இவருக்கு மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சி நடிகர் என்று பல பெயர்கள் உண்டு. மக்கள் திலகம் என்று முதன் முதலில் வழங்கியவர் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன். புரட்சி நடிகர் என்று அவரை அழைத்தவர் கலைஞர் கருணாநிதி.

பொன்மனச் செம்மல் என்ற பெயரை வழங்கியவர் திருமுருக கிருபானந்த வாரியார். ஆனால் புரட்சி நடிகர் என்று இருந்த எம்ஜிஆரை புரட்சித்தலைவர் என்று அழைத்தவர் தென்னகம் ஆசிரியரும், அதிமுகவின் முதல் அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான கே.ஏ.கிருஷ்ணசாமி தான்.

1972ல் நவ.3ம் நாளன்று சென்னை கடற்கரை சீரணி அரங்கில் அதிமுகவின் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கே.ஏ.கிருஷ்ணசாமி பேசுகையில், இதுவரை நம் தலைவரை நாம் அனைவரும் புரட்சி நடிகர் என்றே அழைத்தோம்.

இனிமேல் அவர் புரட்சிநடிகர் அல்ல. புரட்சித் தலைவர். ஊழலை ஒழித்துக் கட்டும் தர்மயுகத்தின் தானைத்தலைவர். இனிமேல் நாம் அனைவரும் அவரைப் புரட்சித் தலைவர் என்றே அழைக்க வேண்டும் என்றார். அப்போது வானுயர புரட்சித்தலைவர் வாழ்க என்ற கோஷம் எழுந்தது.

எம்ஜிஆரை மடக்கும் வகையில் பத்திரிகை நிருபர் “ கலைத்துறையில் நீங்கள் பெற்ற வெற்றிக்கு உங்கள் கழக அரசியல் செல்வாக்குத் தானே காரணம்” என்று கேட்டார். அதற்கு எம்ஜிஆர் அளித்த பதில் தான் சுவாரசியம்.

“நான் ராஜகுமாரி படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த 1947ல் திமுக தோன்றவே இல்லை. இருந்தும் அந்த நேரத்தில் ஜெமினி நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பாக வெளியானது சந்திரலேகா.

அந்தப் படத்தின் வசூலுக்கு அடுத்தப்படியாக வந்து சாதனை படைத்தது ராஜகுமாரி. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

 

அதன் பிறகு அந்த செய்தியாளர் பேசவே இல்லை.

- Advertisement -

Read more

Local News