Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

சாக்ஷி அகர்வால் அதிரடி படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினியின் ‘காலா’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’, சுந்தர் சியின் ‘அரண்மனை 3’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை சாக்ஷி அகர்வால்.இவரிடம், தற்போது பணியாற்றி வரும் படங்களைப் பற்றி கேட்டபோது, ” பிரபுதேவா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பஹிரா’ மற்றும் இயக்குநரும், நடிகருமான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் ‘நான் கடவுள் இல்லை’ என்ற இரண்டு படங்களின் பணிகளை நிறைவு செய்திருக்கிறேன். ‘கெஸ்ட் – சாப்டர் 2’ எனும் அனிமல் திரில்லர் ஜானரிலான படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறேன்.

அறிமுக இயக்குநர் விக்கி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்திங நடிகர் சந்தோஷ் பிரதாப்புக்கு ஜோடியாக அழுத்தமான வேடத்தில் நடித்து வருகிறேன். இதை தொடர்ந்து ‘கந்தகோட்டை’ படத்தை இயக்கிய இயக்குநர் சக்தி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறேன்.” என்றார்.தொடர்ந்து எம்மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் எனக் கேட்டபோது, ” கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதைகளில் நடிப்பதற்கான வாய்ப்பு தொடர்ச்சியாக வருகிறது. இதில் இரண்டு மலையாள படங்களில் கதைகளை தேர்வு செய்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். தமிழிலும் கதையின் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் எனக்கு பொருத்தமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க திட்டமிட்டிருக்கிறேன்.” என்றார்.

- Advertisement -

Read more

Local News