Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

பாபி, ஆர்யாவின் வசந்தமுல்லை டீசர் வெளியீட்டு விழா ( வீடியோ)

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரமணன் புருஷோத்தமன் இயக்கத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கும் படம் வசந்தமுல்லை. அவருக்கு ஜோடியாக  சிகப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் நடித்த நடிகை காஷ்மிரா நடித்திருக்கிறார். படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

திரைப்படத்தின்  இயக்குனர் ரமணன் புருஷோத்தமன் இதற்கு முன்பு சில ஷார்ட் பிலிம்களை இயக்கி கவனத்தை ஈர்த்தவர். பிரேமம், நேரம் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த  ராஜேஷ் முருகேசன் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்துக்கு கன்னடத்தில் வசந்த கோகிலா என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இப்படம் வரும்  பிப்ரவரி 10ஆம் தேதி தமிழ் ,தெலுங்கு, கன்னடம் என்ற மூன்று மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. அதோடு படத்தின் டீசரும் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பேராதரவு பெற்று வருகிறது.

அந்த வீடியோ..

- Advertisement -

Read more

Local News