Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

கொடுமை! டான்சர் ரமேஷ் தற்கொலைக்கு இதுதான் காரணமா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டான்சர் ரமேஷ் டிக்டாக், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மைக்கேல் ஜாக்சன் ஸ்டைல் நடனம் மூலம் பிரபலமானார். மேலும், சமீபத்தில் வெளியான துணிவு படத்திலும் நடித்தார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில்,கடந்த ஜனவரி 27 அன்று கே.பி. பார்க் அரசு குடியிருப்பு பகுதியில் உள்ள இரண்டாவது மனைவி இன்பவள்ளி வீட்டிற்கு சென்றார். அங்கு, 10வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் பலியானார்.

ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக  அவரது இரண்டாவது மனைவி கூறினார். ஆனால் முதல் மனைவி சித்ரா, தனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் அளித்தார்.

இந்த நிலையில் டான்சர் ரமேஷின் முதல் மனைவி அவரை உருட்டுக்கட்டையால் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதில் பேசும் டான்சர் ரமேஷ் “எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. எனக்கு குடிக்க காசு கொடுக்க மறுக்கிறார்கள். வேலைக்கு செல் என்கிறார்கள் சம்பாதி என்கிறார்கள். அது வேலைக்கு ஆகாது;நம்மால் அது முடியாது. அதனால் நான் சாகிறேன் ” என்று பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News