விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை யோகி பாபு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
வாகனத்தை விஜய் ஓட்டிச் செல்ல, பின்னால் அமர்ந்திருக்கிறார் யோகி பாபு. இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டு செல்கிறார்கள்.
இது குறித்து யோகிபாபு, “விஜய் ஒரு பெரிய நடிகர். ஆனால் அந்த எண்ணமே இல்லாமல்.. சக நண்பர் போல, ஒரு சகோதரன் போல பழகினார். படப்பிடிப்பின் போது வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார். செல்போன்கூட பார்க்கமாட்டார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு நடிப்பார். அவரிடம் இந்த சின்சியாரிட்டியை கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் யோகிபாபு.