Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

மேடையிலேயே திட்டு வாங்கிய கோவை சரளா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எம்.ஜி.ஆர் பலருக்கும் பற்பல உதவிகளை செய்தவர்.  அப்படி ஒரு சம்பவம் இது…

ஒருமுறை கோவையில் அதிமுக சார்பில்  பொதுக்கூட்டம் நடந்தது. அதில்  ஒரு சிறுமி சிறப்பாக பேசினார்.  உடனே அவரை எம்.ஜி.ஆர். பாராட்டி, அவரது குடும்பம் குறித்து விசாரித்தார். ஏழைக் குடும்பம் என்பது தெரியவரவும், தனது சொந்த செலவிலேயே சிறுமியை படிக்க வைத்தார்.

பல வருடங்களுக்கு பின்று, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது ஒரு திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டார். அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கினார்.. அப்போது ஒரு நடிகையை பார்த்த போது அவர்தான் அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சிறுமி என்பதை அறிந்துகொண்டார்.

அதோடு, அவரை மேடையிலேயே கடுமையாக பேசிவிட்டார்.

அப்படி திட்டு வாங்கியவர் கோவை சரளா.

“உன்னிடம், ‘ சினிமாவுக்கோ, அரசியலுக்கோ வரக்கூடாது.. நன்றாக படிக்கவேண்டும்’ என சொல்லித்தானே படிக்க வைத்தேன். இப்படி நடிகையாகி வந்து நிற்கிறாயே” என்றார்.

இதை கோவை சரளா, ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

Read more

Local News