கிட்டத்தட்ட1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து சாதனை புரிந்தவர் இளையராஜா.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் பி.வாசு ஒரு தகவலை பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.

அவர், “எனது இயக்கத்தில் பிரபு – குஷ்பு நடித்து ஹிட் அடித்த திரைப்படம் சின்ன தம்பி. இதற்கு இளையராஜா இசை அமைத்த பாடல்களும் பெரிய அளவில் ரீச் ஆகின. அவற்றில் ஒன்றான, ‘தூளியிலே..’பாடலை குழந்தையை தாலாட்டி தூங்கவைக்க தாய்மார்கள் பாடுவது இன்றளவும் நடக்கிறது.
படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். சுச்சுவேஷனை சொன்னதும் அரை மணி நேரத்தில், ஐந்து பாடல்களுக்கும் மெட்டு போட்டு கொடுத்துவிட்டார் இளையராஜா” என்றார் பி.வாசு.
இளையராஜா என்றாலே ஆச்சரியம்தான்!