சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் இந்தப் படம் 10 மொழிகளில் தயாராகி வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடக்கும் ஒரு கதையாக படம் உருவாக்கப்பட்டு உள்ளது.
சூர்யா ஐந்து வேடங்களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக, திசாபதானியன் நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வரும் ஏப்ரலுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் படப்பிடிப்பே முடியாத நிலையில், விற்பனையில் சாதனை படைத்து இந்திய திரை உலகையே ஆச்சரியப்படுத்தி இருக்கிறது, ‘சூர்யா 42’ படம்.
வரலாற்று பின்னணி கொண்ட இந்த படத்தின் அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் மோஷன் போஸ்டரோட வெளியானது.
இதுவரை 40க்கும் மேற்பட்ட இந்திப் படங்களைத் தயாரித்துள்ள ஜெயந்திலால் கட்டாவின் பிரண்ட்ஸ் ஸ்டூடியோஸ், சூர்யா 42 படத்தின் இந்தி உரிமையை ரூ.100 கோடிக்கு வாங்கி இருக்கிறது. விக்ரம், ஆர்ஆர்ஆர், சீத்தாராமம், பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 (ஏப்ரல் 2023 ரிலீஸ்) என பல படங்களின் இந்தி உரிமையையும் பென் ஸ்டூடியோஸ் தான் வாங்கியுள்ளது.
சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ், தியேட்டரிகல் ரைட்ஸ், இந்திக்கான நெகட்டிவ் ரைட்ஸ் ஆகியவையும் பெரும் தொகைக்கு விற்பனை ஆகி உள்ளது.
பான் இந்தியா படங்களிலேயே மிகப்பெரிய விலைக்கு போயிருப்பது இந்த படம்தான்” என்கின்றனர் திரையுலகில்.