Wednesday, November 20, 2024

ஏவி.எம். படத்துக்கு இசை அமைக்க தயங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த எடுத்த, ‘மின்சார கனவு’ படத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார் ஏவிஎம். சரவணன்.

“1997ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனத்திற்கு பொன்விழா ஆண்டு.  அதற்கு முன்பாக நாங்கள் படம் எடுப்பதில் சிறு இடைவெளி ஏற்பட்டது.   டி.வி. தொடர்களில் கவனம் செலுத்தி வந்தோம்.

பல நண்பர்கள், ‘ஏன் படம் எடுக்காமல் இருக்கிறீர்கள்?’ என கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

அப்போது நண்பர் மாரியப்பன், ‘நீங்க ஏன் பிரபுதேவாவை புக் பண்ணக்கூடாது’ என்று ஐடியா கொடுத்தார். பிரபுதேவாவை ஒப்பந்தம் செய்தோம்.

விளம்பரப் படங்களை இயக்கிக் கொண்டு இருந்த ராஜிவ் மேனன் எனது நண்பர். அவர் மூலமாக ஏ.ஆர்.ரகுமானை இசை அமைக்கக் கேட்டோம். ஆனால் ரகுமான் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.


மாடர்ன் அவுட்லுக் இருக்கிற இயக்குனராக இருந்தால்தான் இசை அமைப்பேன் என மறுததார்.


எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ராஜிவ் மேனனை அழைத்தேன். ரகுமான் இப்படி விரும்புகிறார். நீங்கள் இயக்கும் விளம்பரப் படங்களில் 30 வினாடிகளில் அருமையா கதை சொல்றீங்க. அப்படிப்பட்ட திறமை இருக்கும்போது ஏன் நீங்கள் ஒரு முழுப்படம் பண்ணக்டாது என்று உரிமையுடன் கேட்டேன்.


முதலில் மறுத்த ராஜிவ் மேனன் பிறகு ஒப்புக்கொண்டார். ரகுமானிடம் சொன்னார். நீ படம் டைரக்ட் பண்றதாயிருந்தா நான் மியூசிக் பண்றேன் என்றார் ரகுமான்.

பிறகுதான் அந்த படம் உருவானது. படத்தில் இடம் பெற்ற, பூப்பூக்கும் ஓசை உட்பட அனைத்து படால்களும் பிரபலமாகின” என்றார் ஏவி.எம். சரவணன்.

- Advertisement -

Read more

Local News