Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

‘பகாசுரன்’ சென்சார் ஆனது! வெளியீடு எப்போது?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அதிரடி இயக்குநர் மோகன்ஜியின், பகாசுரன் படத்துக்கு யு/ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் அடுத்த மாதம் வெளியாகும் என  அவர் அறிவித்து உள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தவர்,  மோகன் ஜி. இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படம், பகாசுரன்.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே, மோகன் ஜி, ‘ஈசன் அருள்’, ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’  என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை வெளியிட்டது ஆர்வத்தைத் தூண்டியது. தொடர்ந்து  படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதில், பெண்களை சூறையாடுபவர்களை குறிவைத்துக் கொலை செய்யும், வேடத்தில் செல்வராகவன் தோன்றினார். மேலும், ‘உங்கள் பிள்ளைகள் அறைக் கதவுகளை மூடிக்கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்’ என்ற வசனமும் டீசரில் இருந்தது. ஆகவே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அடுத்து படத்தின், முதல் சிங்கிள் பாடலான, ‘சிவம் சிவமயம்..’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்நிலையில் இயக்குநர் மோகன்ஜி, “பகாசுரன் திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு,  யு/ஏ  சான்றிதழ் அளிக்கப்பட்டு உள்ளது. படம், பிப்ரவரி மாதம் வெளியாகும்” என அறிவித்து இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News