Friday, September 20, 2024

கமலுடன் நயன் நடிக்காதது ஏன்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகருடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்து உள்ளார். நடித்தும் வருகிறார்.

 தவிர, தற்போது அட்லி இயக்கும்  “ஜவான்” இந்தி திரைப்படத்தில் ஷாருக் கானுடன் நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்த நிலையில், ‘ரஜினி, அஜித், விஜய், சிம்பு, தனுஷ் போன்ற மாஸ் ஹீரோக்களுடன் நடிக்கும் நயன்,  இதுவரை கமல்ஹாசனுடன் ஒரு திரைப்படத்தில் கூட நடித்ததில்லையே.. ஏன்’ என்ற கேள்வியை ரசிகர்கள் பலரும் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தனது டூரிங் டாக்கீஸ் யூ டியுப் சேனலில் இது குறித்து தெரிவித்து உள்ளார்.

சித்ரா லட்சுமணன்

அவர், “கமல்ஹாசனும் நயன்தாராவும் சேர்ந்து நடிக்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இப்போது கமல்ஹாசன் நடித்துக்கொண்டிருக்கின்ற படங்களின் கதையமைப்பும் ஒரு காரணமாக உள்ளது. அதாவது, நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க நயன்தாரா விரும்புகிறார்.    அப்படிப்பட்ட கதாப்பாத்திரமாக இருந்தால்தானே நயன்தாராவை அதில் நடிக்க வைக்கமுடியும்” என அந்த வீடியோவில் சித்ரா லட்சுமணன் தெரிவித்து உள்ளார்.

இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான சினிமா தகவல்களை அறிய, கீழே உள்ள, ‘டூரிங் டாக்கீஸ்’ யு டியுப் சேனல் லிங்க்க கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/@TouringTalkiesCinema

- Advertisement -

Read more

Local News