நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். படத்தில, கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்கின்றனர்.
ரஜினியின் ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அதே போல, மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக மலையாள இணையதளங்களில் தகவல
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் எஞ்சிய படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார்.
காரில் இருந்து இறங்கி ரஜினி செல்லும் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.