Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

டார்ச்சர் சந்திரபாபு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நட்சத்திரங்கள் சிலர் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருவது இல்லை என்கிற புகார் இன்று கூறப்படுகிறது. பல காலத்துக்கு முன்பே இப்படி நடப்பது உண்டு.

கண்ணதாசன் தயாரித்து  கே. சங்கர்  இயக்கிய கவலை இல்லாத மனிதன் படத்தில்  நடந்த சம்பவத்தை, அப்பபடத்தின் உதவி இயக்குனரும் நடிகருமான ரா. சங்கரன் கூறினார்.

“அந்த படத்தின் நாயகன், மறைந்த நடிகர் சந்திரபாபு. அவர், மிகச்சிறந்த நடிகர், பாடகர் என பன்முகம் கொண்டவர். கலகலப்பாக பழகக் கூடியவர். அதே நேரம் சில சமயங்களில் அவரது நடவடிக்கை பிறரை பாதித்து விடும்.

படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை. இதனால்  பலமுறை படப்பிடிப்பு பாதித்துவிட்ட சூழல்.

அப்படி நடந்த ஒரு சமயத்தில், கண்ணதாசன் “நானே போய் அழைத்துவருகிறேன்” என்று சந்திரபாபு வீட்டிற்கே போய்விட்டார்.

இவர் வருவதை அறிந்த சந்திரபாபு பின்வாசல் வழியாக வெளியே சென்றுவிட்டார். இது தெரியாத கண்ணதாசன் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு திரும்பினார்.

கடும் கோபத்துடன் படப்பிடிப்பு தளத்துக்கு கண்ணதாசன் வர.. அங்கே நடித்துக்கொண்டு இருந்தார் சந்திரபாபு.

கண்ணதாசனுக்கு சிரிப்பதா அழுவதா என தெரியாத நிலை” என்று அந்த சம்பவத்தை விவரித்தார் ரா.சங்கரன்.

- Advertisement -

Read more

Local News