இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்துள்ள திரைப்படம், கட்டில். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையில் வைரமுத்து (தமிழுக்கு) பாடல்களை எழுதி உள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு செய்தி தொடர்புத்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் தலைமையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இதில், பாடகர் சித்ஶ்ரீராம் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் பாடிய, கோவிலிலே.. பாடல் வெளியிடப்பட்டது.
வெளியான பதினைந்து மணி நேரத்தில், 14 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.
இது குறித்து சித்ஸ்ரீராம்,”மிகவும் உணர்வு மிக்க பாடல்களாக நான்கு மொழிகளிலும் அமைந்துள்ளது. நான் மிகவும் நேசித்து மிகுந்த ஈடுபாடு கொண்டு இதில் பாடியுள்ளேன். படமும் பாடலும் நான்கு மொழிகளில் வெற்றிபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து பாடலை கேளுங்கள்.. பாருங்கள்..: