வெளியாகி மூன்றாவது வாரத்தை நெருங்கும் வேளையிலும், அவதார் திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.
இந்தியாவில் வெளியான முதல் நாளில் 40 கோடி ரூபாய் வசூலித்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம், தொடர்ந்து தினமும் இரட்டை இலக்க வசூலை குவித்து வருகிறது.
ஜேம்ஸ் கேமரூன்-இயக்கிய இப்படம் முதல் நாளான டிசம்பர் 16-ம் தேதி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 40.50 கோடி வசூலித்தது. இதன் மூலம் இந்தியாவில் முதல் நாளில் 53.10 கோடி ஈட்டிய அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) படத்துக்குப் பிறகு, இரண்டாவது அதிக பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனராக மாறியது.
, இந்தியாவில் அவதார் 2 படத்தின் மொத்த வசூல் இப்போது ரூ.333 கோடியாக உயர்ந்துள்ளது. இது தொடர்ந்தால், இந்தியாவில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேமின் மொத்த வசூலான ரூ.367 கோடியை இந்தப் படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவிலும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது அவதார் 2.