Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

பத்திரிகையாளரின் வீட்டை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், “தமிழ்த் திரையுலகில் நெம்பர் ஒன் நடிகர் விஜய்தான்” என அவரது ரசிகர்கள் முழக்கமிட்டனர். இதையே மேடையில் இருந்து உற்சாகமாகச் சொன்னார் தயாரிப்பாளர் தில் ராஜ்.

மேலும் அதே விழாவில், “தற்போது நடிகர் விஜய்தான் சூப்பர் ஸ்டார்” என நடிகர் சரத்குமார் பேசினார்.

இதையடுத்து இரு தரப்பு ரசிகர்களும் யார் சூப்பர் ஸ்டார் என சமூகவலைதளங்களில் மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், பத்திரிகையாளர் பிஸ்மி என்பவர், “விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார்.

ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார், மக்கள் விஜய்யை அந்த இடத்தில் வைத்துவிட்டார்கள்” என்று ஒரு யூ டியுப் சேனலில் பேசினார்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் பத்து பேர், சென்னையில் உள்ள பிஸ்மியின் வீட்டுக்கு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ரஜினி குறித்து யூடியூபில் பேசிய காணொலிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சினிமா பத்திரிகையாளரின வீட்டுக்கே சென்று ரஜினி ரசிகர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News