இன்று தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகர்களுள் ஒருவர் அஜீத். இவரது திரை வாழ்க்கையில், காதல் கோட்டை படம் முக்கியமானது. அத்திரைப்படத்தின் பெரிய வெற்றி, அஜித்தை முதல் இடத்தின் பக்கம் கொண்டு வந்தது.
ஆனால் இந்த காதல் கோட்டை திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் அபிஷேக் சங்கர்.
நடிகர், சீரியல் நடிகர், இயக்குனர் என பன்முக அவதாரம் கொண்டவர் இவர்.
மோகமுள், பென்சில், ஆம்பள, பதினாறு , துப்பறிவாளன் என தேர்ந்தெடுத்து சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்பவர்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “மோகமுள் படத்தில் நடித்த பிறகு, உன்னி நிவாதம் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தேன். அடுத்து என் ஆசை மச்சான் படத்தில் நடித்தேன்.
இந்த காலகட்டத்தில், கமலுடன் நம்மவர் படத்தில் கரண் நடித்த ரோல் கிடைச்சது. அதே போல காதல் கோட்டை படத்தில் ஹீரோ வாக நடிக்கும் வாய்ப்பும் வந்தது. ஆனால் ஏற்கெனவே நான் ஒப்புக்கொண்ட படங்களை விட்டு வர முடியாததால் இந்த படங்கள் கை நழுவிப்போய்விட்டன” என தெரிவித்து உள்ளார்.