Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“கட்சித் தலைவர் ஆகிறார் ஜி.பி.முத்து!”: நடிகர் சதீஷ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சன்னிலியோன் நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் சன்னி லியோன், தர்ஷா குப்தா, சதீஷ், ஜிபி முத்து  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஜிபி முத்து, “முதன்முறையாக திரைப்படத்தில் நடித்துள்ளேன்.  இந்த படத்தில் நல்ல கதாப்பாத்திரம் அளித்துள்ளார்கள்.. எனது நடிப்பைப் பற்றி நீங்கள்தான் கூற வேண்டும்” என்றார்.

நடிகர் சதீஷ் பேசும்போது, “சன்னிலியோன் தான் இந்த படத்தின்  ஹீரோ, ஹீரோயின் எல்லாம்!  மற்ற அனைவரும் அப்படத்தில் ஓர் அங்கம்தான்!”  என்றார். தொடர்ந்து அவர், “ஜி.பி.முத்து மிகவும் பிரபலம் அடைந்துவிட்டார்.  விரைவில் கட்சி ஆரம்த்து அதன் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார்” என்று சீரிஸயாக சொல்ல… இதைக் கேட்ட ஜி.பி.முத்து, ‘அய்யய்யோ.. அப்படி எல்லாம் இல்லை..’ என்று சைகை காண்பித்தார்.

இதனால் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.

- Advertisement -

Read more

Local News