Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வைரல் ஆகும் விஜய் சேதுபதி காலெண்டர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன், ஒவ்வொரு வருடமும், வித்தியாசமான தலைப்பில் ஆல்பம் உருவாக்கி,  அதனை மாதாந்திர நாட்காட்டியாக வடிவமைத்து வெளியிடுவார்.

முந்தைய ஆண்டுகளில் “ஹூயூமன்”, “கலைஞன்” ஆகிய தலைப்புகளில் விஜய் சேதுபதியை வைத்து காலெண்டர் உருவாக்கினார்.

இந்த ஆண்டும், அவரோடு இணைந்து, “தி ஆர்டிஸ்ட்” என்ற தலைப்பில் காட்சிகளை வடிவமைத்து, 2023-ம் ஆண்டுக்கான மாதந்திர நாட்காட்டியை உருவாக்கி இருக்கிறார்.

 ஓவியர், சிற்பி, கிராபிடி ஆர்டிஸ்ட் என பல பரிமாணங்களில் விஜய் சேதுபதியை புகைப்படம் எடுத்து, அதனை வண்ணமயமான நாட்காட்டியாக உருமாற்றியுள்ளார் எல்.ராமசந்திரன்.

இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படைப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக அயராது உழைத்தோம். 12 கண்கவர் செட்களை, தனித்துவமான   வடிவமைப்பில் உருவாக்கினோம்.

விஜய் சேதுபதியும் வழக்கம்போல, அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு அளித்தார்” என்றார்.

- Advertisement -

Read more

Local News