Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

‘அவரையே’ பயமுறுத்தினாரா ரகுவரன்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில்  தவிர்க்க முடியாக நடிகர்களில் ஒருவர் ரகுவரன். நாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம்  என பல பரிமாணவங்களில் மக்களை கவர்ந்தவர்.

பல நடிகர்களுடன் வில்லனாக தோன்றி இருக்கிறார். குறிப்பாக ரஜினிக்கு வில்லனாக அருணாச்சலம், முத்து,பாட்ஷா உள்ளிட்ட வெற்றிப் படங்களில் முத்திரை பதித்து இருக்கிறார்.

ஆனால் உலக நாயகன் கமல்ஹாசனுடன் ஒரு படத்தில்கூட அவர் நடித்ததில்லை. அந்த காலகட்டத்தில், ‘ரகுவரன் சிறப்பாக நடிப்பதால், தன்னைவிட பெயர் வாங்கி விடுவாரோ என்ற அச்சம் கமலுக்கு இருந்தது. அதுதான் காரணம்’ என சில பத்திரிகைகளில் கிசு கிசுக்கள் வந்ததும் உண்டு.

ஆனால்  சமீபத்தில் பேட்டி அளித்த ரகுவரன் மனைவி ரோஹினி இதை மறுத்துள்ளார்.

அவர், “நாயகன் படத்தில் நாசர் நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு முதலில் ரகுவரனைத்தான் கமல் அணுகினார். அப்போது வேறொரு படத்திற்காக ரகுவரன் நீளமான முடி வளர்ந்திருந்தார். ஆகவே நடிக்க முடியவில்லை.

கமல், ரகுவரன் இருவருக்குமே சேர்ந்து நடிக்கவில்லையே என்கிற ஏக்கம் இருந்தது” என ரோஹினி கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News