வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற ’சில்லா சில்லா’ என்ற அனிருத் பாடிய பாடல் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் ஹிட் ஆகி உள்ளது.
அடுத்து படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலான, ‘காசேதான் கடவுளடா’ என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டுவிட்டரில் கூறியிருந்தார்.
இந்நிலையில், இப்பாடல் நாளை டிசம்பர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
ஆகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.