நடிகர் திலகத்தின் பாசமலர் திரைப்படத்தை(யும்) யாரும் மறக்க முடியாது.
அந்த படத்தின் கிளைமாக்ஸில் அவர் இறப்பது போல் காட்சி.
அந்த காட்சியில் சோர்வாக தெரிய வேண்டும் என்பதற்காக, முதல் நாள் இரவு தூங்காமல் இருந்திருக்கிறார் சிவாஜி கணேசன்.
தூக்கம் வரக்கூடாது என்பதற்காக, இரவு முழுவதும் தொடர்ந்து நான்கு திரைப்படங்களை, தனது வீட்டில் இருந்த மினி திரையரங்கில் பார்த்திருக்கிறார்.
இதை அறிந்து பதறிய தயாரிப்பாளர், “ஏன் இப்படி செய்தீர்கள்” என கேட்டிருக்கிறார்.
அதற்கு சிவாஜி, “செய்யும் வேலையில் திருப்தி இருக்க வேண்டும். நடிக்கிற நேரத்தில் மட்டும்தான் அந்த வேலை என நினைக்கக் கூடாது.. காட்சிக்கேற்ப தயார் செய்துகொள்வது நடிப்பு வேலைதான்” என்றார்.
என்ன ஒரு அர்ப்பணிப்பு!