சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் மாமனிதன். தற்போது ஓ.டி.டி. சேனல்களிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதோடு, பரிசுகளையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் நூற்றாண்டு கடந்த – பாரம்பரியம் மிக்க – காசி இந்து பல்கலைக்கழகத்தில் மாமனிதன் படம் திரையிடப்பட்டது.
காசி தமிழ் சங்கம விழாவை ஒட்டி, நடந்த இந்தத திரையிடல் நிகழ்ச்சியை இந்திய கல்வித்துறை மத்திய இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி தொடங்கி வைத்தார். காசி இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர் டாக்டர் ஜெகதீஷன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார்.
மாமனிதன் திரையிடலுக்குப் பிறகு, படம் குறித்த கலந்துரையாடலும் நடந்தது.
இறுதியில் பேசிய சீனு ராமசாமி கூறும் போது, “மாமனிதன் படத்துக்கு தொடர்ந்து கிடைத்து வரும் அங்கீகாரம் மன நிறைவை அளிக்கின்றது. குறிப்பாக இவ்விழாவில் கர்ணன், திருவிளையாடல், கப்பலோட்டியத் தமிழன் என நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் திரையிட உள்ளனர். இதில் மாமனிதன் திரைப்படமும் இடம் பெற்றதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.