இயக்குநர் அமீருடன் ஒரு செட் பிராப்பர்டியை போலவே படம் முழுவதும் வந்திருப்பதாகக் கூறினார் நடிகர் இமான் அண்ணாச்சி.
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’.
‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது, “ஒரு செட் பிராப்பர்ட்டி மாதிரி படப்பிடிப்பின்போது இயக்குநர் அமீருடன் கூடவே பயணிக்கும்விதமாக எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சியை மூன்று நாட்கள் படமாக்கியபோது அமீர் ஒரு பேருந்துக்குள் வசமாக சிக்கிக் கொண்டுபட்ட அவஸ்தைகள், அந்த சமயத்தில் அவருடன் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்வுகள் எல்லாமே இனிமையானவை. ‘யோகி’ படத்திற்கு பிறகு இந்த ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் அமீருக்கு உலக அளவில் மிகப் பெரிய இடத்தை பெற்றுத் தரும்” என்று கூறினார்.