அழகானவர் என்பதோடு துணிச்சலானவர் என்றும் பெயர் எடுத்தவர் நடிகை ராய் லட்சுமி! சில சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தவர்.
அவர், “ஆனால் நானே பயந்த விசயம் ஒன்றும் நடந்தது. மிருகா படத்துக்காக ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தது. காட்டுக்கு உள்ள அரை கிலோமாட்டர் தூரத்தில் உள்ள பங்களாவில் தங்கி இருந்தோம். ‘இரவில் கரடி, புலி போன்ற மிருகங்கள் வீட்டு வாசல் வரை வரும். கதவைத் திறக்காதீர்கள்’ என்று சொன்னார்கள். பயமாகப் போய்விட்டது.
அது போல இரவில், புலியின் உறுமல் கேட்க.. பயந்தே போய்விட்டேன். மிரட்சியாக இருந்தது. காலையில்தான் தெரிந்தது.. பக்கத்து அறையில் இருந்த சிலர், விளையாட்டாக புலி போல் உறும.. அதைக் கேட்டு நான் பயந்துவிட்டேன் என்பது” என சிரித்தபடியே சொன்னார் ராய் லட்சுமி.