பாடகி, நடிகை, யுடியூபர் என பன்முகம் கொண்ட இளம் நடிகை கெட்டிகா சர்மா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து கூறினார்.
அவர், “ஹைதராபாத்தில் ஒரு படப்பிடிப்பு நடந்தது. அப்போது கூட்டத்தில் ஒருவன் நீண்ட நேரமாக என்னை முறைத்துக் கொண்டே இருந்தான். அதோடு, ஆபாசமாக நாக்கை சுழற்றுவது, கை அசைவுகள் செய்வது என டார்ச்சர் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
படப்பிடிப்பில் இருக்கும்போதே இதை கவனித்தேன். இடை வேளையின் போது அவனை அழைத்தேன். அவன் அருகில் வந்ததும், முகத்தில் ஒரு குத்துவிட்டு, எட்டி உதைத்தேன். அவ்வளவுதான். அடி வாங்கிய பயத்தில் ஓடி விட்டான். பெண்கள் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும்” என்றார் கெட்டிகா சர்மா.