நடிகர் அஜித் குமார் வலிமை,நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது துணிவு ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர் வெடிமுத்து அஜித் நடிப்பில் வெளியான’என்னை தாலாட்ட வருவாளா’ என்ற படத்தை எடுத்தார். அந்த படத்தில் நடந்த சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார். அமராவதி படத்தில் அஜித் நடித்து விட்டு அடுத்த பட வாய்ப்பு இல்லாமல் 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தார்.
அவரை மீண்டும் சினிமாவுக்கு இந்த படத்தின் மூலம் கொண்டு வந்தேன். ஆனால் அவரை என்னால் முழுமையாக இந்த படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை.
இந்த கதையில் முதலிரவில் நாயகிக்கும் நாயகனுக்கும் சண்டை வந்து விடும். அதில் நாயகன் நான் உன்னுடன் ஒரு நாள் கூட சேர்ந்து வாழமாட்டேன். ஆனால் என் குழந்தை உன் வயிற்றில் வளரும் என சவால் விட்டு பிரிந்து விடுவார்.
அஜித் முழுமையாக நடிக்க வேண்டியது. ஆனால் பண நெருக்கடியால் கதையை மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலை. நாயகன் உயிரணுக்கள் கொண்டு டெஸ்ட் டியூப் பேபி மூலம் குழந்தை பிறக்க வைத்து மீதி கதையை இப்படி முடித்தேன். என்று தயாரிப்பாளர் வெடிமுத்து பேட்டியில் கூறியிருந்தார்.