அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்.இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. நகைசுவை கலந்த கதாநாயகனாகவும் காலப்போக்கில் தனது நடிப்பு மாற்றிக்கொண்டார் கார்த்திக்.
இவரது படத்திற்கு பெரும்பாலும் இளையராஜா தான் இசையமைப்பாளராக இருந்தார். பல வெற்றிப் பாடல்களை கொடுத்தவர். தனது இசையால் ரசிகர்கள் மனதை வசியம் செய்து வைத்துள்ள மாயக்காரர் இளையராஜா.
ஒரு மேடையில் கார்த்திக் நடந்து கொண்டது பிடிக்கமல் இளையராஜா நீ ஒரு ஹீரோ இப்படி காமெடியன் போல் நடந்து கொள்கிறாய். என அனைவரின் முன்னிலையில் அவரை திட்டிவிட்டார்.
கோபத்தில் அக்கரை இருப்பதை புரிந்து கொண்ட கார்த்திக் முகம் சுழிக்காமல் சிரித்துக் கொண்டே தலையாட்டினார்.