Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

‘தீ இவன்’ படத்தில் நடனமாடியிருக்கும் சன்னி லியோன்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’,  ‘சிந்துபாத்’ படங்களை தயாரித்து இயக்கிய T.M.ஜெயமுருகன், தனது மனிதன்  சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் மூலம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து,  தயாரித்து, இயக்கி வரும் படம்  ‘தீ இவன்.’

நவரச  நாயகன்’ கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, சுமன்.J, சிங்கம் புலி, இளவரசு, சுகன்யா,‘சேது’ அபிதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில்  கவர்ச்சி ராணி சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

மேலே ஆகாயம் கீழே பாதாளம்…’ எனத் தொடங்கும் அந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட பொருட் செலவில் அரங்கு அமைக்கப்பட்டு நேற்று  படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே படத்தின் டீசரையும் வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து  படக் குழுவினர் பத்திரிகையாளர்களை  சந்தித்தனர். அப்போது நடிகை சன்னி லியோன் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் பேசும்போது, “குறுகிய கால இடைவெளியில் மீண்டும் சென்னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னைக்கு வருவதற்கு முன்பு ஒருவித அயர்ச்சியில் இருந்தேன்.

ஆனால், இந்தப் படத்தின் பாடலுக்கு ஆடியபோது ரொம்பவும் கூலாகிட்டேன். டான்ஸ் மாஸ்டர்  மிக அழகாக நடன அசைவுகளை அமைத்துக் கொடுத்ததால் ரொம்ப எளிதாகவும், நன்றாகவும் நடனமாட முடிந்தது. படத்தின் ஒட்டு மொத்தக் குழுவினருக்கும் எனது நன்றியும், வாழ்த்தும்.

நான் எப்போதும் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டே இருக்கிறேன். அதனால் திரைப்படங்கள் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கும்போது பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்கள் பார்ப்பதுண்டு. ஆனால் அது இந்த மொழிதான் என்று இல்லை. கலைக்கு மொழி இல்லை.

நான் இந்தப் பாடல் காட்சியில் ஏன் நடித்தேன் என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள். தயாரிப்பாளர் உள்ளிட்ட ஒட்டு மொத்தக் குழுவினருக்கும் எனது நன்றிகள்.

இன்றைக்கு தேசிய பத்திரிகையாளர் தினம். நீங்கள் இல்லாமல் நாங்கள் மக்களை சென்று சேர முடியாது. உங்க வேலை என்றைக்குமே நிற்காது. இந்த நாளில் பத்திரிகையாளர்களுக்கு எனது வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் Y.N.முரளி, காதல் கந்தாஸ், முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ள சுமன் J, தயாரிப்பாளார் நிர்மலா தேவி ஜெயமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இறுதியில் ‘தீ இவன்’ படத்தின் டீசரை சன்னி லியோன் வெளியிட்டார்.

- Advertisement -

Read more

Local News