விஜய் கவுதம் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் 13.
இது குறித்து ஜிவி பிரகாஷ் கூறும்போது, “இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தலக்கோணம், வாகமன் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. பல காட்சிகள் நடுக் காட்டில் படமாக்கப்பட்டன. இரவு நேரத்தில் யானைகளின் பிளிறல் கேட்கும். அதைக் கேட்கும்போது அடிவயிறே கலங்கும்.
ஒரு முறை காட்டுப் பாதையில் ஜீப்பில் சென்று கொண்டு இருந்தோம். கொஞ்ச தூரத்தில் ஒரு சிறுத்தை எங்களைக் கடந்து சென்றது. அதைப் பார்த்து உறைந்து போய்விட்டோம். ஏனென்றால் அங்குதான் முதல் நாள் படப்பிடிப்பு நடந்தது. அந்த நேரத்தில் சிறுத்தை வந்திருந்தால்.. நினைத்த போதோ உடல் நடுங்கியது” என அந்த டென்சன் நிமிடங்களை பகிர்ந்து கொண்டார், ஜிவி பிரகாஷ்.