வில்லன் வேடங்களில் அதிரடி காட்டி வந்த ஆனந்தராஜ், சில வருடங்களாக நகைச்சுவைக் காட்சிகளிலும் முத்திரை பதித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் இவர் அளித்த பேட்டியில், “சில படங்களில் சிறப்பாக நடித்தும் அந்த காட்சிகள் நீளம் கருதி வெட்டப்படுவது உண்டு. விக்னேஷ் சிவன் எனக்கு நல்ல நண்பர். தனது நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கவைத்தார். அந்தப் படத்தில் நான் செய்த காமெடி பலராலும் ரசிக்கப்பட்டது.
ஆனால் அதில் வெட்டப்பட்ட காட்சிகள் அதிகம். அது எனக்கு வருத்தம்தான். என்னைவிட வருத்தப்பட்டவர் நயன்தார். ‘படத்தில் வந்த காட்சிகளைவிட கட் செய்த காட்சிகளில் இன்னும் ரசித்துச் சிரித்தேன்.. அதெல்லாம் கட் செய்யப்பட்டு விட்டதே’ என வருந்தினார். சொல்லப்போனால் இதுவும் ஒரு பாராட்டுதானே” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார் ஆனந்தராஜ்.
பரவாயில்லை… நயன்தாராவே பாராட்டி இருக்கிறார் என்றால் அதைவிட வேறு என்ன வேண்டும்!