நாற்பத்தி ஆறு வயது ஆகும் உலக அழகி, நடிகை சுஷ்மிதா சென், இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். இடையில் இரு திரும ண உறவுகள் முறிந்துபோயின.
இது குறித்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்தார்.
அவர், “யாரைப் பார்த்தாலும் ‘ஏன் தனியாக இருக்கிறாய்.. எப்போது திருமணம்’ என்கிறார்கள். இந்தக் கேள்வி அலுப்பூட்டுகிறது. ஏன், ஒரு பெண் தனியாக இருக்கக்கூடாதா? தவிர நான் தனியாகவும் இல்லையே.. என் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகத்தானே வாழ்கிறேன்!
மூன்று முறை திருமணம் செய்துகொண்டேன.. அப்படி ஒரு சூழல். ஆனால் எனக்கு நல்ல வாழ்க்கை அமையவில்லை. ஆனாலும் மூன்று முறையும் இறைவன் என்னை காப்பாற்றினார். அந்த நபர்களால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை சொல்லக்கூட முடியாது.
என் திருமண வாழ்க்கை முறிந்துபோனாலும், என் மகள்கள் சூழலை நன்கு உணர்ந்துள்ளனர்.. அந்த முறிவுகளை இயல்பாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இனி என் வாழ்வில் திருணம் என்பதே கிடையாது. என் குழந்தைகள்தான் எல்லாமே!” என்று கூறியிருக்கிறார்.
.