“மத ரீதியாக கலவரம் ஏற்படும்வகையில் திரைப்படங்களை உருவாக்காதீர்கள்” என்று மூத்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “இந்த ‘பொள்ளாச்சி’ படத்தின் இயக்குநரான ‘நேசம்’ முரளி அவர்களால் இயக்குநர் சங்கம் பெருமைப்படுகிறது. ஒவ்வொரு படங்களையும் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக எடுக்கிறார்.
ஒரு படம் என்ன செய்யும்..? ஒரு படத்தை பார்த்து அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கார்டு தருவது நடக்கிறது. நீங்கள் என்ன படம் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால், அந்த படம் இறுதியில் என்னவாகிறது என்பதே முக்கியம்.
உங்களிடம் ஒரு வேண்டுகோள். மத ரீதியாக கலவரத்தை தூண்டும்படியான படங்களை எடுக்காதீர்கள். இன்றைய சூழல் மிக மோசமாக இருக்கிறது. இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக வாழ்த்துகள்…” என்றார்.