பரதன் இயக்கத்தில் கமல், சிவாஜி, நாசர், கவுதமி உள்ளிட்டோ் நடித்து 1992ல் வெளியான தேவர் மகன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் நாயகன் கதாபாத்திரத்துக்கு ஈடாக முக்கியமானது வில்லன் கதாபாத்திரம்.
பெரிய தேவர் என்ற அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியபோதே, சலீம் கவுஸ்தான் அந்த வேடத்துக்கு பொருத்தம் என தீர்மானித்து விட்டார் கமல். சலீம் சிறந்த நடிகர் என்றாலும், சரளமாக தமிழ் பேச வராது. அதுவும் இந்தப் படத்தில் தெற்கத்தி தமிழ் பேச வேண்டும்.
அப்போதுதான் இந்த கதாபாத்திரத்தில் நாசரை நடிக்க வைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. அவரும் பெரிய தேவர் கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்.
திரைப்படம் இப்படித்தான்.. படப்பிப்பு துவங்கும் வரை எந்த கதாபாத்திரத்துக்கு எந்த நடிகர் என உறுதியாகச் சொல்ல முடியாது!