திரையுலகைப் பொறுத்தவரை உலகின் ஆகச்சிறந்த விருது, ஆஸ்கர்தான். தமிழ் திரையுலகில் வெற்றி கொடி நாட்டி வரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்றிருந்தாலும், அது தமிழ்ப் படத்துக்கு அல்ல.
அதே நேரம் பல படங்கள் ஆஸ்கர் விருது கமிட்டு அனுப்பட்டே வருன்றன. சமீபத்தில் கூட சூர்யா நடித்த “ஜெய் பீம்” திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இதற்கு முன்பும் கூட பல படங்கள் அனுப்பபட்டது. ஆக இந்த விருதுக்கு அன்புப்படுவதே ஒரு அங்கீகாரம் என்று ஆகவிட்டது.
அதே நேரம், முதன் முதல் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட படம் எது என பலருக்குத் தெரியாது.
ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த தெய்வ மகன் படம்தான், தமிழில் இருந்து ஆஸ்கர் விருத்துக்கு அனுப்பப்பட்ட படம். ஆண்டு, 1970. ஆனால் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவவை எந்த தமிழ்ப்படமும் இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஆஸ்கர் விருது என்பது தமிழ்த்திரையுலகுக்கு கனவாகவே இருக்கிறது. விரைவில் இந்த கனவு நிறைவேற வேண்டும்.