Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“கூட்டணி வேண்டாம்!” : மறுத்த கமல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இன்று தமிழ்த்திரையுலகின் உச்ச நடிகர்களாக ரஜினி, கமல் இருவரும் இருக்கின்றனர்.  இவர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்ற விருப்பம் ரசிகர்களுக்கு இருக்கிறது.  இதை அவர்களும் கூட மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு காலத்தில் ரஜினியுடன்  இணைந்து நடிக்க மறுத்த சம்பவமும் நடந்தது.

அதற்கு முன்பு வரை இருவரும் இணைந்து படங்களில் நடித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், அவர்களை இணைத்து வைத்து ஒரு படத்தை தயாரிக்க ஏவி.எம். நிறுவனம் முடிவு செய்தது. எஸ்.பி. முத்துராமன் படத்தை இயக்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு ரஜினி ஒப்புக்கொண்டார். ஆனால் கமல் மறுத்துவிட்டார்.

அவர், “ஆரம்ப காலத்தில் நாங்கள் இணைந்து நடித்தோம். இப்போது இருவருக்கும் தனித்தனி ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். ஆகவே தனித்தனியாகவே படங்கள் வெற்றி பெறும். இருவரும் கால்சீட் கொடுத்து, சம்பளத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கும். தயாரிப்பாளர்களுக்கும் கூடுதல் செலவு. ஆகவே இனி தனித்தனியே நடிக்கலாம். அது இருவரது திரையுலக வாழ்க்கையிலும் ஏற்றத்தைத் தரும்” என்றார்.

அவரது பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த முத்துராமனும், ரஜினியும், “இது சரியான விசயம்தான்” என ஒப்புக்கொண்டனர்.

காலமும் அதை உறுதி செய்தது.

திரைத்துறை டெக்னிகல் விசயங்களில் மட்டுமல்ல.. திரையுலக வியாபாரம், எதிர்காலம் குறித்தும் சரியாக கணிக்கக்கூடியவர் கமல்!

- Advertisement -

Read more

Local News