Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

அசோக் செல்வன்-அபர்ணா பாலமுரளி நடித்த ‘நித்தம் ஒரு வானம்’ நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து தயாரிக்கும், ‘நித்தம் ஒரு வானம்’ படம் வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது.

நல்ல கதையம்சம் கொண்ட ஃபீல் குட் படங்கள் எப்போதும் சினிமா பார்வையாளர்களின் முதல் தேர்வாக இருக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக உருவெடுத்திருக்கிறது ‘நித்தம் ஒரு வானம்.’

இந்தப் படத்தில் அசோக்செல்வன், ரித்துவர்மா மற்றும் அபர்ணா பாலமுரளி & ஷிவாத்மிகா ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசை: கோபி சுந்தர், ஒளிப்பதிவாளர்: விது அய்யனா, படத் தொகுப்பு : அந்தோணி, கலை இயக்கம் : கமல்நாதன், பாடல்கள் : கிருத்திகா நெல்சன், நடன இயக்குநர்: லீலாவதி குமார், நிர்வாகத் தயாரிப்பாளர்: S. வினோத் குமார், ஒலிக்கலவை: T. உதயகுமார், ஆடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார், சண்டை பயிற்சி இயக்கம் : விக்கி, புகைப்படங்கள்: ஷேக், பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா D’One, சதீஷ், விளம்பர வடிவமைப்பு: ஏஸ்தெடிக் குஞ்சம்மா, புரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ்: G கண்ணன், தயாரிப்பு கட்டுப்பாடு: மோகன் கணேசன், விஷுவல் புரோமோஷன்ஸ்: Feel the Wolf.

வாழ்க்கையின் பயணத்தை மிகவும் பாசிட்டிவான முறையில் கையாண்டுள்ள இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். படம் பார்த்து முடித்து திரையரங்குகளில் இருந்து பார்வையாளர்கள் வெளியேறும்போது நிச்சயம் கதை குறித்து பாசிட்டிவாக உணர்வார்கள்.“என இயக்குநர் Ra. கார்த்திக் நம்புகிறார்.

சென்னை, சண்டிகர், மணலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா என வித்தியாசமான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் வரும் நவம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

- Advertisement -

Read more

Local News