Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

20 பைசா அட்வான்ஸ்! அதிர்ந்த கவிஞர் கண்ணதாசன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைத்துறைக்கு வந்ததில் இருந்து இறுதிவரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக விளங்கியவர் கவிஞர் கண்ணதாசன்.  எம்.ஜி.ஆர். – சிவாஜி துவங்கி கமல் – ரஜினி.. அடுத்தடுத்த நடிகர்கள் காலத்திலும் பாடல்கள் எழுதியவர்.

இந்த நிலையில், 1971ம் வருடம் நீலநாராயணன் என்பவர், ‘அன்புக்கு ஒரு அண்ணன்’  என்ற திரைப்படத்தை தயாரித்தார்.

படத்திற்கு பாடல்கள் எழுத கண்ணதாசனை ஒப்பந்தம் செய்ய நினைத்தார். ஆதலால் கண்ணதாசனின் வீட்டிற்கு, தயாரிப்பு நிர்வாகிகள் இருவரை அனுப்பி பேசச்சொன்னார்.

அவர்களும் கண்ணதாசன் வீட்டுக்கு வந்து விபரத்தைச் சொன்னார்கள். அவரும் பாடல் எழுத ஒப்புக்கொண்டார்.

இறுதியில், அவரிடம் அவரிடம் 20 பைசா நாணயம் ஒன்றை அளித்தார்கள்.  “இதுதான் அட்வான்ஸா” என அதிர்ந்த கண்ணதாசன், “ ஏதோ அந்த நிறுவனத்தின் சென்ட்டிமென்ட் போலும்” என நினைத்தார்.

வந்த இருவரும் அடுத்து எம்.எஸ்.வியை புக் செய்ய செல்வதாக கூறிச்சென்றனர். ஆகவே கண்ணதாசன் எம்.எஸ்.வி.க்கு போன் செய்து,  விசயத்தைக் கூறி, “அதிர்ந்துவிடாதே..” என கூறி போனை வைத்து விட்டார்.

எம்.எஸ்.வி. வீட்டுக்குச் சென்ற பட நிறுவன பிரதிந்திகள், அவரிடம் பேசிவிட்டு, ஒரு தங்க நாணயத்தை அட்வான்ஸாக அளித்தார்கள்.  ஆச்சரியப்பட்ட அவர், “கண்ணதாசனுக்கு இருபது காசுதான் கொடுத்தீர்களாமே” என கேட்டிருக்கிறார்.

சில மணி நேரத்திற்கு பின் அந்த பிரதிநிதிகள் எம்.எஸ்.வியின் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது எம்.எஸ்.வியிடம் விவரத்தை கூறி ஒரு தங்க நாணயத்தை அவரிடம் கொடுத்தனர். உடனே எம்.எஸ்.வி. “கண்ணதாசனை ஒப்பந்தம் செய்யப்போன போது இருபது பைசா நாணயத்தை கொடுத்தீர்களாமே” என அவர்களிடம் கேட்டார்.

தயாரிப்பு நிர்வாகிகள் அதிர்ந்துபோய்,  “கண்ணதாசனுக்கும் தங்க நாணயம் கொடுக்க வேண்டும். ஆனால்  அதே வடிவில் இருந்த 20 பைசா நாணயத்தை தவறுதலாக அளித்துவிட்டோம்” என பதறி உடனடியாக கண்ணதாசன் வீட்டுக்குச் சென்று தங்கக்காசினை அளித்தனர்.

திரைத்துறையில்தான் எத்தனை எத்தனை சுவாரஸ்யமான சம்பவங்கள்!

- Advertisement -

Read more

Local News