ஆச்சி என்று சினிமாவை தாண்டி ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் மனோரமா.
அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர், எஸ்.எஸ்.ஆர், உள்ளிட்டோருடன் நடித்த பெருமைக்குரியவர்.
‘கொஞ்சும் குமரி’ படத்தில் கதாநாயகனாக ஆர்.எஸ்.மனோகர் நடிக்க ,நாயகியாக மனோரமா அறிமுகமானார் .
அதன் பிறகு குணசித்திர, நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்க தொடங்கி எம்.ஆர்.ராதா, பாலையா, காகா ராதா கிருஷ்ணன், சந்திரபாபு, நாகேஷ், சோ என்று பலருடன் படங்களில் நடித்தவர்
ஒரு காலத்தில் – அவர் நாடகத்துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த காலத்தில் – அவர் வறுமையில் இருந்தார். அந்த காலகட்டத்தில் கவிஞர் கண்ணதாசன் உதவிகள் செய்தார்.
அதன் பிறகு பற்பல வருடங்கள் ஆகியும் – திரைத்துறையில் முக்கிய இடத்தைப் பிடித்து, வளமான வாழ்க்கைக்கு வந்த பிறகும் – மனோரமா அந்த உதவியை மறக்கவில்லை.
இறுதி வரை.. எந்த ஒரு பேட்டி என்றாலும், கவிஞர் கண்ணதாசன் செய்த உதவியை நினைவு கூறாமல் இருந்ததில்லை.
ஆச்சி, மறைந்தும் இன்று வாழ்வதற்கு அவரது நடிப்பு மட்டுமல்ல.. அவரது நற்குணமும் காரணம்