Saturday, September 21, 2024

“என் ஹஸ்பெண்ட்டுக்கு நான்தானே செய்ய முடியும். வேற யார் செய்வா?” – நடிகை மீனா அளித்த பதில்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“என் கணவரை நல்லபடியாக வழியனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால்தான் நானே அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்தேன்” என்று நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர் சமீபத்தில் காலமானது நினைவிருக்கலாம். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தற்போதுதான் நடிகை மீனா விரிவான பேட்டியொன்றை அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் இருந்த தன் கணவர் இறந்த சூழலையும், அதிலிருந்து தான் மீண்டது எப்படி என்பது பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார் மீனா.

அந்தப் பேட்டியில், “உங்கள் கணவரின் இறப்பிற்கு காரணம் என்ன..?” என்று கேட்டபோது “அவர் ஹைதராபாத்தில் தங்கியிருந்த இடத்தில புறாக்கள் அதிகமா இருந்திருக்கு. அதன் எச்சத்தை சுவாசித்ததால அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்துச்சு. இதற்கான அறிகுறி எதுவும் வெளில தெரில.

கொரோனா எங்க வீட்டில எல்லோருக்கும் வந்திச்சு. ஆனால் அது அவரைத் தவிர மற்ற எல்லாருக்கும் குணமாகிடுச்சு. அவருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சினை இருந்ததாலதான் இன்னும் பாதிப்பு அதிகமாயிருச்சு. அதனால்தான் அவருக்கு சரியாகவில்லை..” என்று கூறினார் மீனா.

கணவருக்கு அவரே இறுதி சடங்கு செய்தது பற்றி கேட்டபோது, “என்னோட ஹஸ்பண்ட்டுக்கு நான்தானே சடங்கு பண்ண முடியும்? வேற யாரு பண்ணுவாங்க…? அந்த டைம்ல நான் யோசிக்கல. அப்படி எல்லாம் சொல்லுவாங்க என்று! ஆனால் எனக்கு அவரை நல்லபடியா அனுப்பி வைக்கணும் என்ற எண்ணம் இருந்ததாலதான் நானே அவரோட இறுதிச் சடங்ககை செஞ்சேன். அதுல என்ன தப்பு இருக்கு..?” என்று வெளிப்படையாகப் பதில் சொல்லியுள்ளார் நடிகை மீனா.

மேலும், “என் கணவர் இறந்த துன்பத்தில் இருந்து சீக்கிரமாக மீண்டு வருவேன் என்று நான் நினைக்கவில்லை. இதெற்கெல்லாம் காரணம் எனது அம்மா, குடும்பம் மற்றும் என் நண்பர்கள்தான்.

பொதுவாக நான் நண்பர்களின் விஷேசங்களுக்கு போயிருக்கிறேன். ஆனால் என்னோட கஷ்டத்தில நிறைய பேர் இருந்திருக்கிறாங்க. எனக்கு தெரியாதவங்ககூட வந்து ஆறுதல் சொன்னாங்க. நான் இதை எதிர்பார்க்கல. இது தவிர சில ப்ரண்ட்ஸ் என்கூடவே இருந்து வெளில கூட்டிட்டு போறது… என்கூட டைம் ஸ்பென்ட் பண்றது என்று எல்லாமே செய்தாங்க.. அவங்களாலதான் நான் இப்போ அந்த துன்பத்தில இருந்து விடுபட்டிருக்கின்றேன்..” என்று தான் மீண்ட கதையைக் கூறினார் மீனா.

“மாற்று நுரையீரல் கிடைத்திருந்தால் கண்டிப்பாக கணவரைக் காப்பாற்றி இருக்க முடியுமா?” என்ற கேள்விக்குப் பதில் கூறிய மீனா, “கண்டிப்பா காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அப்படி நுரையீரல் கிடைப்பது ரொம்பவும் கஷ்டம். ஏனென்றால் அப்படி கிடைக்கும் மாற்று நுரையீரலும் ஆரோக்கியமா இருக்கணும். பிளட் குரூப் பொருந்தணும். உயரம், எடையும் பொருந்தணும். இப்படி இதுல கண்டிஷன்ஸ் நிறையவே இருக்கு. அதனால் இது அவ்வளவு ஈசி கிடையாது.

இந்த விஷயத்தில் இவ்வளவு கண்டிஷன்ஸ் இருக்கு என்பதே எனது கணவர் இறந்ததுக்கு பிறகுதான் தெரியும். அதனால்தான் நுரையீரல் தானம் செய்ய நானே இப்போது பதிவு செய்துள்ளேன். இது நாம இருக்கும்போது செய்யப் போறதில்லை. நாம இறந்ததுக்கு பிறகுதான் பண்ணுவாங்க. அதனால நமக்கு தெரிய போறதில்லை. இதை் அனைவரும் கண்டிப்பாக செய்தால் சமூகத்திற்கு நல்லதொரு விஷயமா இருக்கும் என்றுதான் நுரையீரல் தானத்திற்கு ஓகே சொன்னேன். ஆனால் கமல் ஸார் இதை முன்னாடியே செய்துள்ளார்…” என்றார் மீனா.

- Advertisement -

Read more

Local News