Touring Talkies
100% Cinema

Saturday, September 13, 2025

Touring Talkies

ஆர்யா-சித்தி இத்னானி நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்திய சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்த  ஜீ ஸ்டூடியோஸ் & டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து, நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கின்றன. இந்தப் படம் ஆர்யாவின் 34-வது படமாகும்.

டெடி’, ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘கேப்டன்’ என மாறுப்பட்ட படங்கள் மூலம் தொடர் வெற்றிகளை தந்து வரும் நடிகர் ஆர்யா, இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

கிராமத்து பின்னணியில் அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா இப்படத்தினை இயக்குகிறார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வீரமணி கலை இயக்கம் செய்கிறார்.

இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி, இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் உடன் இணைந்தது குறித்து  ஜீ ஸ்டுடியோவின் சவுத் மூவிஸ் தலைவர் அக்‌ஷய் கெஜ்ரிவால் கூறுகையில், “இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் எங்களது அடுத்த திரைப்படத்தில்  ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் உடன்  இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

ஆர்யா தொடர்ந்து  மாறுப்பட்ட பாத்திரங்களில்  வித்தியாசமான படங்கள் மூலம்  பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் இயக்குநர்  முத்தையா அனைத்து தரப்பு ரசிகர்களின் நாடித்துடிப்பை நன்கு புரிந்து கொண்டவர். இவர்கள் கூட்டணி பார்வையாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்கும் என்பது உறுதி.

சிறந்த உள்ளடக்கங்கள் கொண்ட, பல அற்புதமான படங்களை வழங்கிய ட்ரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ்  நிறுவனத்துடன் இணைந்திருப்பது எங்களுக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.  நாங்கள் அனைவரும்  பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான  அனுபவத்தை தரும், நல்ல படைப்பை வழங்குவோம்  என்று நம்புகிறோம்” என்றார்.

- Advertisement -

Read more

Local News