Saturday, September 21, 2024

சத்யராஜ்-வசந்த் ரவி நடிக்கும் புதிய படம் ‘வெப்பன்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பல மொழிப் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ’பான் இந்தியா’ நடிகர் என்ற உயரத்தை நடிகர் சத்யராஜ் அடைந்திருக்கிறார். நடிகர் சத்யராஜின் அடுத்தடுத்த படங்களின் வரிசை என்பது நம்பிக்கைக்குரிய மற்றும் எதிர்ப்பார்ப்புகளை தூண்டுவதாக இருக்கிறது.

அந்த வகையில் அவர் தற்போது ’வெப்பன்’ என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். ’தரமணி’, ‘ராக்கி’ மற்றும் தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரக் கூடிய வசந்த் ரவியும் இந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகனாக நடிக்கிறார்.

மில்லியன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் M.S.மன்சூர் இந்தப் படத்தைத் தயாரித்து வழங்குகிறார்.

எழுத்து, இயக்கம் – ஏ.குகன் சென்னியப்பன், இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – பிரபு ராகவ், படத் தொகுப்பு – நஷ், கலை இயக்கம் –  சுபேந்தர், சண்டைப் பயிற்சி இயக்கம் – சுதேஷ், ஆடை வடிவமைப்பு – லேகா, நிர்வாக தயாரிப்பு – A.ரிஸ்வான், புரொடக்‌ஷன் கண்ட்ரோலர் – கந்தன், விளம்பர வடிவமைப்பு – அஷோக்.

இந்த ‘வெப்பன்’ படத்தின் டைட்டில் லுக், நடிகர் சத்யராஜின் பிறந்த நாளான இன்று அக்டோபர் 3-ம் தேதி வெளியானது.

படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்தான விவரம் விரைவில் வெளியிடப்படும்.

சஸ்பென்ஸ் – ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மலைப் பிரதேசங்களில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News